

ஆண்களுக்கு வழங்கும் சலுகைகளை பெண்களுக்கும் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த மகளிர் தின விழாவில் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் பேசியுள்ளர்.
தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு மற்றும் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு கல்வி நிறுவனம், டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி ஆகியவை இணைந்து மகளிர் தினத்தை உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று கொண்டாடின. இதைத் தொடங்கி வைத்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் பேசியதாவது:
ஒரு நாட்டில் பெண்கள் எந்தள வுக்கு சுதந்திரமாக நடத்தப்படு கிறார்களோ அதைப்பொறுத்து தான் அந்தநாடு முன்னேறிய நாடா? இல்லையா? என்பதே முடிவு செய்யப்படும். பெண் களுக்கு சமஉரிமை வழங்குவது. கல்வி உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் சம வாய்ப்பை வழங்குவது மிகவும் முக்கிய மானது. ஆண்களுக்கு வழங்கும் அதே சலுகைகளை பெண்களுக் கும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மூத்த பெண் வழக்கறிஞர்கள் ஹேமா சம்பத், நளினி சிதம்பரம், சித்ரா சம்பத் உள்ளிட்ட பலருக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் நினைவுப்பரிசு வழங்கினார். இவ்விழாவில், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பி.வணங்காமுடி, சட்டக்கல்வித்துறை இயக்குநர் என்.எஸ்.சந்தோஷ்குமார். ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு கல்வி நிறுவனத்தின் இயக்குநர் லதா பிள்ளை, பெண் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் கே.சாந்தகுமாரி உட்பட பலர் பங்கேற்றனர்.