

அதிமுக தலைமை அலுவலகத்தில் 50 கிலோ எடையுள்ள கேக் வெட்டி மகளிர் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
உலக மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு அதிமுக மகளிர் அணியினருக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளரும் முதல்வரு மான ஜெயலலிதா வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். இந்நிலையில், நேற்று காலை மகளிர் அணி சார்பில், அதிமுக தலைமை அலுவலகத்தில் கேக் வெட்டி மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
மகளிர் அணி செயலாளரும் அமைச்சருமான எஸ்.கோகுல இந்திரா, 50 கிலோ எடையுள்ள கேக்கை வெட்டி, சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி மற்றும் மகளிர் நல ஆணைய தலைவர் விசாலாட்சி நெடுஞ்செழியன் ஆகியோருக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில், சமூக நலவாரிய தலைவர் சி.ஆர்.சரஸ்வதி, மகளிர் அணியைச் சேர்ந்தவர்கள், பெண் கவுன்சிலர்கள் என பலர் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து நிருபர் களிடம் பேசிய அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா, “பெண்கள் நலனுக்காக முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள் ளார். பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 50 % இடம் அளிக்கும் சட்டம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மீண்டும் ஜெயலலிதா முதல்வராவார்’’ என்றார்.