

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் தலைமையை ஏற்பது குறித்து பாஜக தலைவர்களுடன் ஆலோ சித்து முடிவெடுப்போம் என்று அக் கட்சியின் மாநிலத் தலைவர் தமி ழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
வரும் சட்டப்பேரவைத் தேர் தலில் தேமுதிக தனித்துப் போட்டி யிடும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். அதே நேரத்தில் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர் கள் கூட்டணியில் சேரலாம் என பிரேமலதா அறிவித்துள்ளார். இதனால் பாஜக அல்லது மக்கள் நலக் கூட்டணி தேமுதிகவுடன் இணையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:
தனித்துப் போட்டி என்ற தேமுதிக வின் அறிவிப்பால் தமிழக தேர்தல் களத்தில் தெளிவு பிறந்துள்ளது. ஊழல் கூட்டணியான திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இணைய மாட்டோம் என விஜயகாந்த் அறிவித்துள்ளது பாராட்டுக்குரியது. விஜயகாந்தை முதல்வர் வேட்பாள ராக ஏற்பவர்கள் தங்கள் கூட்ட ணியில் சேரலாம் என பிரேமலதா அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து பாஜகவின் மற்ற தலை வர்களுடன் ஆலோசித்து முடி வெடுப்போம்.
வாக்குகள் சிதறக் கூடாது என்ப தற்காகவும், மேலும் பலத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக வுமே கூட்டணி அமைக்க முயற் சிக்கிறோம். அதனாலேயே எங் களை பலவீனமானவர்களாக யாரும் நினைத்து விடக் கூடாது.
தனியாக போட்டியிட்டால் ஒரு கட்சியின் பலத்தை நிரூபிக்க முடியும். ஆனால் இரு திரா விடக் கட்சிகளையும் வெல்ல வேண்டுமானால் கூட்டணி அமைத் தால் மட்டுமே முடியும். இந்த யதார்த்த நிலையை அனைவரும் உணர வேண்டும்.
இவ்வாறு தமிழிசை சவுந்தர ராஜன் கூறினார்.