Published : 13 Nov 2021 01:26 PM
Last Updated : 13 Nov 2021 01:26 PM

மழை நீர் தொடர்பாக தொலைநோக்குத் திட்டம் இல்லை: எல்.முருகன் விமர்சனம்

அம்பத்தூர்

மழை நீர் தொடர்பாக தொலைநோக்குத் திட்டம் இல்லாததே பாதிப்புக்குக் காரணம் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வியாழன் மாலை சென்னை அருகே கரையைக் கடந்தது. இதன் காரணமாக சென்னையில் கனமழை பெய்தது. இதனால் நகரின் பல இடங்களில் மழை நீர் சூழ்ந்தது. இந்த நிலையில் மழை பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் அரசியல் தலைவர்கள் பலரும் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில், அம்பத்தூரில் மழை நீரால் பாதிக்கப்பட்ட இடங்களை மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

இதுகுறித்து எல்.முருகன் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், “மழை நீர் எங்கு அதிகப்படியாக தேங்கும் என்ற பட்டியல் தமிழக அரசிடம் இருக்கிறது. எனவே மழை நீர் தேங்கும் பகுதிகளில் வடிகால்களை முன்கூட்டியே தூர்வாரி இருந்தால் மழை நீர் எல்லாம் நேரடியாகக் கடலுக்குச் சென்றிருக்கும். இந்த பாதிப்பைப் பார்க்கும்போது நம்மிடம் மழை நீர் தொடர்பாக தொலைநோக்குத் திட்டம் இல்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

மழை பாதிப்பு குறித்து முதல்வரிடம் பிரதமர் பேசியுள்ளார். போதிய உதவிகளை வழங்குவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். தமிழகத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த இயற்கை பேரிடரிலிருந்து நாம் மீண்டு வருவதற்கு அரசு துரிதமாகச் செயல்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x