

வாக்குக்கு பணம் கொடுப்பதை வருமான வரித்துறையினர் மூலம் சோதனை நடத்தி தடுக்க வேண்டும் என திமுக எம்பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களி டம் அவர் கூறியதாவது: தேர்தல் தேதி குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்தலுக்காக திமுக தயாராகி வருகிறது. திமுக கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வேகமாக பணியாற்றி வருகின்றனர். தேர்தலுக்கான கூட்டணியை இறுதி செய்வது உள்ளிட்ட பணிகளை தலைவர்கள் முடிவு செய்து கொள்வார்கள். தமிழகத்தின் பல பகுதிகளுக்குச் சென்று, மக்களின் முக்கியத் தேவைகளை அறிந்து திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அது விரைவில் வெளியிடப்படும்.
தேர்தலை முன்னிட்டு வாக் காளர்களுக்கு அரசியல் கட்சி யினர் பணம் கொடுப்பதை உறுதியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு சோத னைகள் நடத்தப்பட வேண்டும். வருமான வரித்துறை அதிகாரிகளை பயன்படுத்தி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.