

கனிமொழியின் பிறந்த நாளன்று அவரை நேரில் சந்தித்து வாழ்த்துச் சொன்னார் ஷகிலா. அதனைத் தொடர்ந்து கனிமொழியுடன் ஷகிலா இருக்கும் புகைப்படத்தை வைத்து இணையத்தில் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கிண்டல் செய்து வந்தனர்.
தான் திமுக-வில் இணையவில்லை என்று ஷகிலா கூறியபோதும், அவர் திமுகவிற்கு பிரச்சாரம் செய்ய இருப்பதாக கிண்டல் செய்தார்கள்.
திமுக-வில் இணைந்து விட்டீர்களா, பிரச்சாரம் செய்ய இருக்கிறீர்களா என்று ஷகிலாவிடம் கேட்டபோது, "எனக்கு அரசியல் ஆசை இல்லை. எனக்கு அதைப் பற்றி பெரிதாகத் தெரியாது. அரசியல் என்று வந்துவிட்டால் மற்றவர்களைப் பற்றி தப்பாக விமர்சனம் செய்ய வேண்டும். பொதுவாக எனக்கு அந்த மாதிரி குணம் கிடையாது.
மற்றவர்களைத் திட்டியோ, விமர்சனம் செய்தோ எனக்குப் பழக்கமில்லை. கனிமொழி பிறந்தநாளுக்கு போய் வாழ்த்து சொன்னேன். அரசியல் ஆதாயத்திற்காக போகவில்லை. திருநங்கை கிருபா அம்மா எனக்கு நல்ல தோழி. அவர்களுக்கு கனிமொழியைத் தெரியும் என்பதால் அவர்களோடு சென்றேன். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி பரபரப்பாகி விட்டது.
நான் திமுகவில் சேரவில்லை. இப்போதைக்கு நான் எந்தக் கட்சியிலும் சேரவில்லை, அரசியல் பிரச்சாரமும் பண்ணவில்லை" என்று தெரிவித்தார்.