ரூ.600 கோடியில் காசி விஸ்வநாதர் காரிடார்: டிச.13-ல் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

அன்னபூரணி சிலை
அன்னபூரணி சிலை
Updated on
1 min read

உத்தர பிரதேச மாநிலம் வாரணா சியில் கடந்த 2018 மார்ச்சில் காசி விஸ்வநாதர் கோயில் (காரிடார்)வளாக திட்டம் ரூ.600 கோடி யில் தொடங்கப்பட்டது. காசி விஸ்வநாதர் கோயிலை கங்கை கரைகளுடன் இணைக்கும் வகையில் 320 மீட்டர் நீளமும் 20 மீட்டர்அகலமும் கொண்ட நடைபாதை, அருங்காட்சியகம், நூலகம், யாத்ரீகர்களுக்கான மையம் உள்ளிட்டமேம்பாட்டுப் பணிகள் இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டன.

இவற்றின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் விஸ்வநாதர் கோயில் வளாகத்தை பிரதமர் மோடி டிசம்பர் 13-ம் தேதி திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்னபூரணி சிலை

வாரணாசியில் உள்ள ஒரு கோயிலில் இருந்து அன்னபூரணி சிலை சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்டு, வெளிநாட்டுக்கு கடத்தப்பட்டது. கனடாவில் உள்ள ரெஜினா பல்கலைக்கழகத்தில் கண்டறியப்பட்ட இச்சிலை கடந்தஆண்டு நவம்பரில் இந்திய தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த சிலை அண்மையில் இந்தியா வந்து சேர்ந்தது. இந்நிலையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இச்சிலையை உ.பி. அரசிடம் மத்திய கலாச்சாரத் துறை முறைப்படி ஒப்படைத்தது. நிகழ்ச்சியில் அமைச்சர் கிஷன் ரெட்டி பேசும்போது, "விரைவில் பல்வேறு மாநிலங்களின் பழங்கால பொருட்கள் அந்தந்த மாநில அரசுகளிடம் திரும்ப ஒப்படைக்கப்படும். 2 சிலைகள் தமிழகத்துக்கும் ஒன்று ஆந்திராவுக்கும் மற்றொன்று ராஜஸ்தானுக்கும் அனுப்பப்படும்" என்றார்.

அன்னபூரணி சிலை அலிகர்,கன்னோஜ், அயோத்தி வழியாகவாரணாசி கொண்டு செல்லப்பட்டு,வரும் திங்கட்கிழமை (நவ.15) காசி விஸ்வநாதர் கோயிலில்பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.இதனால் வாரணாசி விழாக்கோலம் பூண்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in