

கடலூர் மாவட்டம் மற்றும் காவிரி டெல்டா பகுதிகளில் மழைபாதிப்புகளை இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்கிறார். இதையொட்டி அவர்நேற்று இரவு புதுச்சேரி வந்த டைந்தார்.
இந்த ஆய்வுக்காக விமானம் மூலம் திருச்சி சென்று, அங்கிருந்து காவிரி டெல்டா பகுதிகளில் ஆய்வு செய்வதாக முதல்வர் ஸ்டாலின் முதலில் திட்டமிட்டிருந்தார். அந்தசுற்றுப்பயண திட்டமானது மாற்றப்பட்டது. அவர் நேற்று இரவே புதுச் சேரி வந்தடைந்தார். இங்குள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கிய அவர், இன்று காலை கடலூர் புறப்பட்டுச் செல்கிறார்.
இன்று காலை கடலூர் மாவட்ட எல்லையான ரெட்டிச்சாவடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகி றார். அங்கிருந்து வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் இதர அதிகாரிகளுடன் குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றித்துக் குட்பட்ட அரங்கமங்கலம் மற்றும் ஆடூர் அகரம் பகுதிகளுக்குச் சென்று மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிடுகிறார்.
அங்கு ஆய்வு செய்யும் முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து நாகை, திருவாரூர், தஞ்சாவூர் என காவிரி டெல்டா மாவட்டங்களில் பாதிப்புகளை பார்வையிடுகிறார்.