

சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து இன்றும், நாளையும் (மார்ச் 4, 5) விருப்ப மனுக்கள் பெறப்படும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் முயற்சியில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்களைப் பெற பாஜக முடிவு செய்துள்ளது.
விருப்ப மனுக்களை தமிழக பாஜகவின் www.bjptn.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பொது தொகுதிக்கு ரூ. 5 ஆயிரம், தனி தொகுதிகள், பெண்களுக்கு ரூ. 2 ஆயிரத்து 500 செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.