Published : 08 Mar 2016 08:20 AM
Last Updated : 08 Mar 2016 08:20 AM

தந்தையின் 16-ம் நாள் காரியத்தில் பங்கேற்க 3 நாள் பரோல் கேட்டு நீதிமன்றத்தில் நளினி மனு

தனது தந்தையின் 16-ம் நாள் காரியத்தில் பங்கேற்க 3 நாள் பரோல் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி மனுதாக்கல் செய்துள்ளார்.

இது தொடர்பாக நளினி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 24 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் மத்திய சிறையில் இருந்து வரு கிறேன். ஆயுள் தண்டனை கைதி கள் 20 ஆண்டுகள் சிறை தண் டனையை அனுபவித்தாலே விடு தலை பெறுவதற்கு சட்டரீதியாக உரிமை உள்ளது. என்னை விடுதலை செய்யக்கோரி தமிழக அரசிடம் மனு செய்துள்ளேன். இது தொடர்பாக நான் தொடர்ந்த வழக்கும் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 23-ம் தேதி எனது தந்தை சங்கரநாராயணன் இறந்தார். அவரது உடல் மறுநாள் சென்னை கொண்டு வரப்பட்டது. அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்க, எனக்கு 12 மணி நேரம் பரோல் வழங்கப்பட்டது. எனது தந்தையின் 16-ம் நாள் காரியத்திலும் பங்கேற்க எனக்கு வரும் மார்ச் 8, 9,10 ஆகிய தேதிகளில் பரோல் வழங்கக்கோரி சிறைத்துறை கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்தும், இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. எனவே எனக்கு 3 நாள் பரோல் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசா ரணைக்கு வரவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x