

*
சட்டசபை தேர்தல் நேரத்தில் எல்லா அரசியல் கட்சியினரும் பிளாஸ்டிக் ப்ளக்ஸ், கொடி, பேனர், தோரணங் களை தவிர்க்க மீண்டும் அறிவுறுத் தப்படுவர் என தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்தார்.
சென்னை காங்கிரஸ் வழக் கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘தமிழக சட்டப் பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ளது. தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சியினர் அளவுக்கு மீறி பிளாஸ்டிக் ப்ளக்ஸ், கொடி, தோரணங்களை அச்சிட்டு சுற்றுப்புறச்சூழலை மாசுபடுத்தி வருகின்றனர். தேர்தல் நேரத்தில் மட்டும் 500 டன் அளவிற்கு பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது.
சென்னை சந்தித்த வரலாறு காணாத மழை வெள்ள சேதத் துக்கு பிளாஸ்டிக் கழிவுகளே மூல காரணம். இதைத் தடுக்க மாநில அரசு எந்தவொரு நடவடிக்கை யும் எடுக்கவில்லை. சென்னை மாநக ராட்சி ஆணையர் அறிக்கைப்படி, சென்னையில் சேகரமாகும் 3 ஆயி ரத்து 400 டன் குப்பைக்கழிவுகளில் 35 முதல் 40 டன் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளன. இது மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. எனவே, வரக் கூடிய தேர்தலில் அரசியல் கட்சி யினர் பிளாஸ்டிக் ப்ளக்ஸ், கொடி, தோரணங்களை பயன்படுத்துவதை தடை செய்யா விட்டால் நீர்நிலைகள் மட்டுமின்றி சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கும்.
எனவே, வரும் தேர்தலுக்கு பிளாஸ்டிக் கொடி, தோரணங்களை பயன்படுத்தும் அரசியல் கட்சி களின் அங்கீகாரத்தை ரத்து செய்து, அக்கட்சி வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்’’ என கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகி யோர் அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் மத்திய அரசு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜ கோபாலன் ஆஜராகி, கடந்த 2006 சட்டப்பேரவை தேர்தலின் போதே அரசியல் கட்சியினர் பிளாஸ் டிக் மற்றும் பாலித்தீன் பொருட் களை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டது. இந்த சட்டசபைத் தேர்தல் நேரத் திலும் எல்லா அரசியல் கட்சியின ரும் பிளாஸ்டிக் ப்ளக்ஸ், கொடி, தோரணங் களை தவிர்க்க மீண்டும் அறிவுறுத்தப்படுவர் என தேர்தல் ஆணையம் சார்பில் உத்தரவாதம் அளித்தார். அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மாசு கட்டுப் பாட்டு வாரியத்தின் சார்பில் ஒரு வாரத்தில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
சென்னையில் சேகரமாகும் 3 ஆயிரத்து 400 டன் குப்பைக்கழிவுகளில் 35 முதல் 40 டன் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளன. இது மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.