Last Updated : 08 Mar, 2016 08:54 AM

 

Published : 08 Mar 2016 08:54 AM
Last Updated : 08 Mar 2016 08:54 AM

விருப்ப மனுக்கள் குறைவால் பாஜக தலைவர்கள் ஏமாற்றம்: தனித்துப் போட்டியிட தயக்கம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி இன்னும் முடிவாக வில்லை. கடந்த மக்களவைத் தேர்தலில் கூட்டணியில் இருந்த தேமுதிக, மதிமுக, பாமக கட்சிகள் இந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி சேர மறுத்துவிட்டன. தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க பிரகாஷ் ஜவடேகர் மேற்கொண்ட முயற்சியும் தோல்வியில் முடிந்ததாகத் தெரிகிறது.

இப்போதைக்கு புதிய நீதிக்கட்சி, சமக மட்டும் கூட்டணி யில் உள்ளன. கூட்டணி சேர பிரதான கட்சிகள் முன்வராதது பாஜக தொண்டர்களை சோர் வடையச் செய்துள்ளது.

இந்த நிலையில் அதிமுக, திமுகவில் சீட் கேட்டு நிர்வாகிகள் அலைமோதியதுபோல, பாஜக விலும் 234 தொகுதியில் இருந்து குறைந்தது 50 பேர் விருப்ப மனு அளிக்க வேண்டும் என்றும், கட்சியில் விருப்ப மனு கேட்டு தொண்டர்கள் போட்டியிடுவதை பார்த்து, தற்போது கூட்டணிக்கு தயங்கும் பல கட்சிகள் தாமாகவே கூட்டணி சேர முன்வருவார்கள் என பாஜக நிர்வாகிகளிடம் பகிரங்கமாகவே தெரிவிக்கப்பட்டது.

மார்ச் 4, 5 ஆகிய தேதிகளில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. மேலிட கணக்குப்படி 11,700 மனு வர வேண்டும். குறைந்தது 10 ஆயிரம் மனுக்களாவது வந்திருக்க வேண்டும். ஆனால், அந்த இரண்டு நாட்களிலும் சுமார் 3,000 பேர் மட்டுமே விருப்ப மனுக்களை அளித்துள்ளனர். இது ஏற்கெனவே கூட்டணி முடிவாகாத வேதனையில் உள்ள பாஜக தலைவர்களை மேலும் அதிருப்திக்கு ஆளாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, பலமான கூட்டணி அமையாமல் தனித்துப் போட்டியிடும் சூழ்நிலை ஏற்பட்டால் எவ்வாறு தேர்தலை எதிர்கொள்வது? கவுரமான வாக்குகளை பெறாவிட்டால் என்ன செய்வது என்ற கலக்கமும் பாஜகவினரிடம் எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x