Published : 11 Nov 2021 03:07 AM
Last Updated : 11 Nov 2021 03:07 AM

ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு எழுதிய ‘போர் பறவைகள்’ நூல் மதிப்பாய்வு விழா: நவ.14-ம் தேதி ஆன்லைனில் நடைபெறுகிறது

சென்னை

அறிவியல் தொழில்நுட்பம் குறித்த பல்வேறு நூல்களை, தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றத்தின் (என்டிஆர்எஃப்) இயக்குநரான ராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு எழுதியுள்ளார்.

அதன்படி ‘போர் பறவைகள்’ என்ற தலைப்பில் போர் விமானங்களின் தொழில்நுட்பம், வகைப்பாடுகள் குறித்த புத்தகத்தை அவர் எழுதியுள்ளார்.

எளிய மொழியில் விளக்கம்

இந்த நூல், போர் விமானங்களின் பயன்பாடுகள், தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தகவல்கள் குறித்து எளிய மொழியில் விளக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. இதன் மதிப்பாய்வு விழா ஆன்லைனில் நவ.14-ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த நிகழ்வை ‘திசையெட்டு பதிப்பகம்’, ‘ஆளுமைச் சிற்பி’ மாத இதழ், விஜயா பதிப்பகம் இணைந்து வழங்குகின்றன. எழுத்தாளர் ஜெய பாஸ்கரன் மற்றும் கவிஞர் த.ச.பிரதீபா பிரேம்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று நூலைப் பற்றிய தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்கின்றனர்.

இந்த ஆன்லைன் நிகழ்வை ‘ஆளுமைச் சிற்பி’ மாத இதழின் ஆசிரியர் மெ.ஞானசேகர், எழுத்தாளர் பிரியசகி, விஜயா பதிப்பகத்தின் புனிதா சிதம்பரம், ஊடக ஆர்வலர் நு.அல்மாஸ் அகமது உள்ளிட்டோர் ஒருங்கிணைப்பு செய்கின்றனர்.

விழா நேரலையை https://youtu.be/8DHXs2QrV7c என்ற வலைதளம் வாயிலாக மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் கண்டு பயன்பெறலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x