Published : 24 Jun 2014 10:32 AM
Last Updated : 24 Jun 2014 10:32 AM

‘இந்திய வரலாற்று துறை’ நூற்றாண்டு விழா சென்னை பல்கலை.யில் கோலாகலம்: துணைவேந்தர்கள் சிறப்புரை

சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள ‘இந்திய வரலாற்று துறை’ யின் நூற்றாண்டு விழா திங்கள் கிழமை தொடங்கியது. இதில், பல்வேறு பல்கலைக்கழகங்களின் முன்னாள் துணைவேந்தர்கள், கல்லூரி முதல்வர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

இதையடுத்து, பச்சையப்பா கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் என்.கே.நாராயணன், சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் எஸ்.சாதிக், அன்னை தெரசா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் டாக்டர் டி.ஜானகி, சி.பி.ராமசாமி ஐயர் அறக்கட்டளை இயக்குநர் டாக்டர் நந்திதா கிருஷ்ணா உள்பட பலர் கலந்து கொண்டு இந்திய வரலாற்றுத் துறையின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் பற்றி விரிவாக பேசினர்.

வரலாற்றின் முக்கியத்துவம்

பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் பி.ஜெகதீசன் கூறுகையில், ‘‘வெறும் குறிப்புகளை தொகுப் பது மட்டுமே வரலாற்றுத் துறை யின் பணி அல்ல. அனைத்து குறிப்புகளுக்கும் உரிய விளக்கம் எழுத வேண்டும். போதிய ஆராய்ச்சிகளை வலுப்படுத்த வேண்டும்.

இந்த துறைகள் மூலம் தென்இந்தியாவைப் பற்றி நிறைய ஆய்வுகள் மேற்கொள் ளப்பட்டன. வழக்கமாக வட இந்திய ஆய்வாளர்கள் தென் இந்தியா பற்றி விரிவாக எடுத் துரைப்பதில்லை. தென்இந்தியா பற்றி முழுமை யான ஆய்வுகளும், ஆய்வுக் கட்டுரைகளும் இங்கிருந்துதான் தொடங்கின. இதேபோல, தமிழ் கலாச்சாரம், திராவிட கலாச்சாரம் குறித்து முக்கியத்துவம் கொடுத்து ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப் பட்டுள்ளன’’ என்றார்.

நூற்றாண்டு விழா பற்றி சென்னை பல்கலைக்கழக இந்திய வரலாற்றுத் துறை தலைவர் டாக்டர் ஜி.வெங்கட்ராமன் கூறியதாவது:

முன்னாள் மாணவர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ்

சென்னை பல்கலைக்கழகத் தில் முக்கியமான துறையாக இந்திய வரலாற்றுத் துறை விளங்குகிறது. இங்கு பல நூற்றுக்கணக்கான தலைப்பு களில் ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

குறிப்பாக தென் இந்திய வரலாறு பற்றி மட்டுமே 100-க்கும் மேற்பட்ட ஆய்வு நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இங்கு படித்தவர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் ஐஎப்ஸ் அதிகாரிக ளாக, பல்கலைக்கழக துணை வேந்தர்களாக, பேராசிரியர் களாகப் பணியாற்றி வருகின்றனர்.

இத்துறையில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும், பல்வேறு போட்டி தேர்வுகளில் வெற்றி பெறும் வகையிலும்தான் பாடத் திட்டங்களை அமைத்துள்ளோம். கணினி அறிவை வளர்த்துக்கொள் ளும் வகையில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

ரூ.1 கோடி வரை நிதி

இந்நிலையில், இத்துறையின் நூற்றாண்டு விழா கொண்டாடு வது மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடக்க விழாவையடுத்து, 100க்கும் மேற்கொண்ட ஆய்வுக் கட்டுரைகள் கொண்ட நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. இதேபோல, கல்லூரிகளுக்கு இடையே இந்திய வரலாற்றுத் துறை தொடர்பாக வினாடி வினா நிகழ்ச்சியும் நடத்தவுள்ளோம்.

மேலும், இந்த துறையில் யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) அனுமதியுடன் உயர் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படவுள்ளது. இந்த மையம் அமைந்தால் ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை நிதி கிடைக்கும். இதன்மூலம் இத்துறையை மேலும் வலுப்படுத்த முடியும்.

இவ்வாறு வெங்கட்ராமன் கூறினார்.

தொடக்க விழாவையடுத்து, 100க்கும் மேற்கொண்ட ஆய்வுக் கட்டுரைகள் கொண்ட நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x