Last Updated : 06 Mar, 2016 09:34 AM

 

Published : 06 Mar 2016 09:34 AM
Last Updated : 06 Mar 2016 09:34 AM

வேட்புமனு தாக்கலுக்கே ஒன்றரை மாத அவகாசம்: கூட்டணி அமைவது தள்ளிப்போகுமா?

தமிழக சட்டப்பேரவைக்கு மே 16-ம் தேதி தேர்தல் நடை பெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 22-ம் தேதி தொடங்குகிறது. தமிழகத்தில் தேர்தல் ஏற்பாடுகளை ஆணையம் தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சிகள் தொடங்கி பணிகளை முடுக்கிவிட்டன. விருப்ப மனுக்கள் பெறுவது, நேர்காணல், பிரச்சாரம் என கட்சிகள் சுறுசுறுப்படைந்தன.

இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. கடந்த 2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 1-ல் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 13-ம் தேதி தேர்தல் நடத்தப் பட்டது. ஒரு மாதமே அவகாசம் இருந்ததால் கூட்டணி தொகுதி உடன்பாடு, தொகுதிகள் ஒதுக் கீடு போன்ற பணிகளை அவசர கதியில் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் கட்சிகளுக்கு ஏற் பட்டது.

இந்த முறையும் ஏப்ரலிலேயே தேர்தல் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பின் கார ணமாகவே கட்சிகள் முன் கூட்டியே பணிகளை தீவிரப் படுத்தின. ஆனால், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தேர்தல் தேதி மே 16 வரை தள்ளிப்போயுள்ளது. வேட்புமனு தாக்கலே ஏப்ரல் 22-ம் தேதிதான் தொடங்குகிறது.

இன்றைய நிலையில் கட்சிகளின் துல்லியமான கூட்டணி நிலைப்பாடு இதுவரை தெரியவில்லை. நாடாளுமன்றத் தேர் தலில் தனித்துப் போட்டியிட்ட அதிமுக, இப்போது எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனாலும், சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று தெரிகிறது. தேமுதிகவின் வரவுக்காக திமுக, பாஜக கட்சிகளும் மக்கள் நலக் கூட்டணியும் காத்தி ருக்கின்றன. திமுக கூட்டணியில் சேரமாட்டோம் என்றும் தமாகா அறிவித்துள்ளது. அதன் பார்வை, அதிமுக அல்லது மக்கள் நலக் கூட்டணி மீது பதிந் துள்ளது.

தேமுதிகவின் கூட்டணி நகர்வை பொறுத்தே மற்ற கட்சி களின் முடிவுகள் அமையும் என்ற நிலை உள்ளது. திமுக - தேமுதிக கூட்டணி உறுதி செய் யப்பட்டுவிட்டதாகவும், தேமுதிக வுக்கு 59 தொகுதிகள் தரப்படு வதாகவும் கடந்த ஒரு வாரமாகவே உறுதிப்படுத்தப் படாத செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறு நாளே, எந்தக் கட்சியுடனும் தேர்தல் கூட்டணி குறித்து பேச வில்லை என்றும் 59 தொகுதி களுக்கு உடன்பாடு என்பதெல் லாம் வதந்தி என்றும் தேமுதிக அறிவித்துவிட்டது. இது, தேமுதிகவின் கூட்டணி முடிவை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தி யுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் கூட்டணி, தொகுதி உடன்பாடு வேலைகள் எல்லாம் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தேர்தல் தேதி மே 16-க்கு தள்ளிபோனதால், கூட்டணி இழுபறியை தேமுதிக மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.

தேமுதிகவின் வரவை ஆவலோடு எதிர்பார்த்துள்ள கட்சிகள், அதன் முடிவு தெரியாதவரை தொகுதி உடன்பாட்டை இறுதி செய்ய முடியாத நிலைதான் ஏற்பட்டுள் ளது. அதுவரை காத்திருப்பதைத் தவிர அக்கட்சிகளுக்கு வேறு வழியில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x