நிறைவேறும் வாக்குறுதிகளை மட்டும் அளியுங்கள்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
நிறைவேற்றக்கூடிய வாக்குறுதி களை மட்டுமே அளிக்க வேண்டும் என அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2 சட்டப் பேரவை பொதுத்தேர்தலிலும் ‘இல வசங்கள்’ அறிவிப்புதான் பிரதான பிரச்சாரமாக இருந்தது.
இலவசங்களை எதிர்த்து எஸ்.சுப்பிரமணியன் பாலாஜி என்பவர் தொடர்ந்த வழக்கில், தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டியவை குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணை யம் உருவாக்க வேண்டும். இலவச பொருட்கள் வழங்குவது தொடர்பாக தேர்தல் அறிக்கையில் வெளியிடப்படும் வாக்குறுதிகள் சுதந்திரமான, நேர்மையான தேர் தலை பாதிக்கும் என்றும், தேர்தல் அறிக்கை வெளியிடப்படுவதன் நோக்கம் தேர்தல் நடைமுறையுடன் நேரடியாக தொடர்புடையது என்ப தால், அதை தேர்தல் ஆணையம் ஒழுங்குபடுத்தலாம் என உச்ச நீதி மன்றம் கூறியிருந்தது.
இதையடுத்து, அரசியல் கட்சிகளுடன் ஆலோசித்த தேர்தல் ஆணையம், புதிய நெறிமுறைகளை வகுத்தது. இதன்படி, நலத்திட் டங்கள் குறித்த வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் இடம் பெறுவதில் தடையில்லை. தேர்தல் நடவடிக்கைகளின் தூய்மையை கெடுக்கும் வகையிலோ, வாக்காளர் களை கவரும் வகையிலோ வாக்குறுதிகள் அளிக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.
வழங்கப்படும் வாக்குறுதிகள் நியாயமானவையாக இருப்பது டன் அதற்கான நிதி ஆதரங்களை யும் விரிவாக விளக்க வேண் டும். நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளை மட்டுமே அளித்து வாக்காளர்களின் நம்பிக்கையை கோர வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
