

அதிமுக அவைத் தலைவர் நியமனம் குறித்து 10 நாட்களுக்குள் பதிலளிக்க கட்சியின் ஒருகிணைப்பாளர் மற்றும் இணை ஒருகிணைப்பாளருக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவின் அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் உடல் உறுப்பிகள் செயல் இழந்ததால் உயிரிழந்தார். இதனிடையே, புதிய அவைத் தலைவர் நியமிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வந்த நிலையில், அதிமுக புதிய அவைத் தலைவர் நியமனத்திற்கு தடை கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் மனுதாரர் தரப்பில் கூறப்பட்டிருந்ததாவது;
"உட்கட்சி தேர்தல் நடத்தி தேர்வு செய்யப்பட்டபொதுக்குழு உறுப்பினர்கள் மூலமாக மட்டுமே அவைத் தலைவரை தேர்வு செய்ய வேண்டும். இதற்கு பதிலாக நேரடி நியமனம் நடவடிக்கையை ஏற்க முடியாது. எனவே நேரடி நியமனத்திற்கு தடை விதிக்க வேண்டும்"
இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இதனை விசாரித்த உரிமையியல் நீதிமன்றம், மனு குறித்து 10 நாட்களில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.