

கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பிறவி மருத்தீஸ்வரர் கோயிலுக்குள் மழை நீர் புகுந்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது வருகிறது.
இதில் அதிகபட்சமாக திருத்துறைப்பூண்டி பகுதியில் 21 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இதனால் திருத்துறைப்பூண்டியில் உள்ள பிரசித்திப் பெற்ற பிறவி மருத்தீஸ்வரர் கோயிலுக்குள் மழை வெள்ளம் புகுந்ததுள்ளது. கோயில் நிர்வாகம் சார்பில் மோட்டார்கள் மூலம் கோயிலுக்குள் புகுந்த மழை நீர் வெளியேற்றும் பணி நடைபெற்றுகிறது. கோயிலுக்குள் புகுந்த மழை நீர் விரைவில் முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.