

திருப்பூர் மாவட்டம் முழுவதும் பரவலாக இரவு முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.10) ஒரு நாள் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சு. வினீத் அறிவிப்பு.
வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில்,காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக கன மழை பெய்து வருகிறது.இந்நிலையில் நேற்று இரவு 9 மணி முதல் திருப்பூர் மாவட்டம் உடுமலை, தாராபுரம்,காங்கேயம், அவிநாசி,பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக தொடர் மழை பெய்து வருவதால், பள்ளி மாணவ மாணவிகள் மழையில் சிரமத்துடன் பள்ளிக்கு வரக்கூடிய நிலை ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று ஒரு நாள் மட்டும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் வினீத் உத்திரவிட்டுள்ளார்.
இரவு முழுவதும் திருப்பூர் வடக்கில் 7 மி.மீ மழையும், ஊத்துக்குளியில் 6மி.மீ மழையும் அதிக பட்சமாக பதிவாகியுள்ளது.