8-ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு

8-ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு
Updated on
1 min read

தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்ட அறிவிப்பு:

தனித்தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று (நவ.8) தொடங்கி நவம்பர் 12-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில், தமிழகம் முழுதும் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நவ.8, 9-ம் தேதிகளில் நடைபெறவிருந்த தமிழ், ஆங்கிலம் பாடத் தேர்வுகள் ஏற்கெனவே தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டன.

இந்நிலையில், வரும்நாட்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து நவ.10, 11 மற்றும் 12-ம் தேதிகளில் நடைபெறவுள்ள கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களின் தேர்வுகளும் தற்போது தள்ளிவைக்கப்படுகின்றன. இந்த தேர்வுகளுக்கான புதிய மாற்று காலஅட்டவணை விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in