மயிலை அறுபத்து மூவர் திருவிழாவில் பெண்களிடம் செயின் பறிப்பு: கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து போலீஸார் ஆய்வு - குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைப்பு

மயிலை அறுபத்து மூவர் திருவிழாவில் பெண்களிடம் செயின் பறிப்பு: கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து போலீஸார் ஆய்வு - குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைப்பு
Updated on
1 min read

மயிலாப்பூர் அறுபத்து மூவர் திருவிழாவில் செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம் கடந்த 20-ம் தேதி நடந்தது. நேற்று முன்தினம் அறுபத்து மூவர் திருவிழா நடை பெற்றது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரக் கணக்கான மக்கள் விழாவுக்கு வந்திருந்தனர். பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டிருந்த போலீஸார், தங்க நகைகளை மறைத்து செல்லும்படி ஒலி பெருக்கி மூலம் அறிவுறுத்திக் கொண்டிருந்தனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபடுபவர்களை பிடிக்க போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அனைத்து பாதுகாப்பையும் மீறி திருவிழாவுக்கு வந்திருந்த பெண்கள், குழந்தைகள், சிறுவர் களிடம் இருந்து 70 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். தங்க நகைகளை பறிக்கொடுத்தவர்கள் மயிலாப் பூர் போலீஸில் புகார் அளித்தனர். அந்த புகாரின்படி வழக்குப் பதிவு செய்த போலீஸார் கோயில், அதனைச் சுற்றியுள்ள பகுதி, மாட வீதிகளில் விழாவுக்காக தற்காலிக மாக அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

சந்தேகத்தின் பேரில் சிலரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப் பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in