

மக்கள் மனதில் ஏற்பட்டுள்ள மாற்றம் ம.ந.கூட்டணி, தேமுதிக அணிக்கு சாதகமாக அமையும் என்று மார்க்சிஸ்ட் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறினார்.
அம்பேத்கரின் 125-வது பிறந்த நாளையொட்டி தீண் டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், ‘உயர்கல்வி நிலை யங்களில் சாதிய அடக்கு முறைகளை ஒழித்திடல்’ என்ற தலைப்பில் சென்னை புரசைவாக்கத்தில் நேற்று கருத்தரங்கு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்பதற்காக வந்த சீதாராம் யெச்சூரி, முன்னதாக நிருபர்களிடம் கூறியதாவது:
மக்கள் நலக் கூட்டணி, தேமுதிகவுடன் இணைந்துள் ளது நல்ல விஷயமாகும். இதன்மூலம் ம.ந.கூட்டணிக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது. தமிழக மக்கள் மனதில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த மாற்றம் ம.ந.கூட்டணி, தேமுதிக அணிக்கு தேர்தலில் சாதகமாக அமையும். உயர்கல்வியில் சாதிய ரீதியான அடக்குமுறை களையும், தாக்குதலையும் தடுக்க வேண்டும். இதற் கான முயற்சிகளில் மத்திய அரசு அக்கறை காட்டவில்லை. தமிழகத்தில் ம.ந.கூட்டணி ஆட்சி அமைந்தால், கல்வி நிலை யங்களில் அனைவரும் சமம் என்ற நிலை உருவாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் நடந்த கருத்தரங் கில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் சம்பத், கல்வியாளர் வே.வசந்திதேவி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.