ஏனாமில் ஓ.என்.ஜி.சி-க்கு எதிர்ப்பு ; மீனவர்கள் கோதாவரி ஆற்றில் போராட்டம்

ஏனாமில் ஓ.என்.ஜி.சி-க்கு எதிர்ப்பு ; மீனவர்கள் கோதாவரி ஆற்றில் போராட்டம்
Updated on
1 min read

புதுச்சேரியின் ஏனாமில் ஓ.என்.ஜி.சி-க்கு எதிராக கோதாவரி ஆற்றில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் தமிழகம், கேரளம் மற்றும் ஆந்திர மாநிலங்களின் எல்லை பகுதிகள் சுற்றியுள்ளது.

இதில் ஏனால் பகுதியில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு சொந்தமான எரிவாயு தயாரிக்கும் எண்ணெய் கிணறு உள்ளது. இதனை தடுக்க கோரி நூற்றுக்கணக்கான ஏனாம் மீனவர்கள் கௌதமி கோதாவரி ஆற்றில் மீன்பிடி படகுகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஏனாம் பகுதி மீனவர்களுக்கு ஓ.என்.ஜி.சி நிறுவனம் வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகை 13.9 கோடி ரூபாயில் 10.62 கோடி மட்டும் வழங்கப்பட்டு இருப்பதாவும், இழப்பீட்டு தொகையை முழுமையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதன் காரணமாக கோதாவரியில் ஓ.என்.ஜி.சி-யின் துணை ஒப்பந்த நிறுவனங்களின் பணிகள் நிறுத்தப்பட்டன. மேலும், தகவலறிந்து தரியாலடிப்பா படகு துறைக்கு வந்த ஏனாம் மண்டல அதிகாரி கௌரி சரோஜா, காவல் கண்காணிப்பாளர் ராஜாசங்கர் வாலட் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மீதமுள்ள தொகையை பெற்று தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் மீனவர்கள் போராட்டம் கைவிடப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in