அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 3 குழுக்கள் சென்னை விரைவு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

சென்னையின் பல்வேறு இடங்களிலும் வெள்ளநீரில் சிக்கியுள்ளவர்களை மீட்க அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 3 குழுக்கள் சென்னை விரைந்தன.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகமெங்கும் பரவலாக கனமழை பெய்துவருகிறது.

சென்னையில் சனிக்கிழமை கடும் மழை பெய்தது. சில இடங்களில் 20 செ.மீ.க்கும் அதிகமான மழை பதிவாகியுள்ள நிலையில் பல இடங்களிலும் வீடுகளிலும் சாலைகளிலும் தண்ணீர் புகுந்துள்ளது.

மீட்புப் பணிகள் ஏற்கெனவே மாநகராட்சி சார்பில் நடைபெற்றுவரும் நிலையில் தற்போது தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 3 குழுக்கள் விரைந்திருக்கின்றன. மீட்புப் பணிக்கான அதிநவீன கருவிகளுடன் அரக்கோணத்திலிருந்து அவர்கள் புறப்பட்டிருக்கின்றனர்.

மணலி, தாம்பரம், பெரும்புலிபாக்கத்திற்கு தலா ஒருகுழு என பேரிடர் மீட்புப் படைகள் விரைந்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in