

வடகிழக்கு பருவமழை பாதிப்பு கண்காணிப்பு மற்றும் மீட்பு பணியை மேற்கொள்வதற்காக தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்துதலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவு பிறப்பித் துள்ளார்.
அதன் விவரம் வருமாறு:
சென்னை - சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், காஞ்சிபுரம் - கே.ஜெயந்த் முரளி (கூடுதல்டிஜிபி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு), வேலூர் - அம்பரேஷ் புஜாரி(கூடுதல் டி.ஜி.பி. ‘சைபர் க்ரைம்’),விழுப்புரம் - கபில்குமார் சரத்கர்(ஐ.ஜி, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு), சேலம்- அபய்குமார் சிங் (கூடுதல் டிஜிபி., ஆயுதப்படை).
கோவை - வன்னிய பெருமாள் (கூடுதல் டிஜிபி, பெண்கள் மற்றும்குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு), திருச்சி - சைலேஷ்குமார் யாதவ் (கூடுதல் டிஜிபி போலீஸ் நல்வாழ்வு), தஞ்சாவூர் - மகேஷ்குமார் அகர்வால் (கூடுதல்டிஜிபி குற்றத்தடுப்பு பிரிவு), திண்டுக்கல் - வினித் தேவ் வான்கடே (கூடுதல் டிஜிபி மாநில குற்ற ஆவணக் காப்பகம்), மதுரை - எச்.எம்.ஜெயராம் (கூடுதல் டிஜிபிராமநாதபுரம்) - சுமித் சரண் (ஐஜி. ஊர்காவல் படை), திருநெல்வேலி - அபின் தினேஷ் மொடக் (ஐஜி பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு).
மேற்கண்ட மாவட்டங்களில் இந்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணியை மேற்கொள்ள உள்ளனர்.
இப்பணிக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. தினகரன், போலீஸ் பயிற்சி ஐ.ஜி. அருண்ஆகியோர் பெயரும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தேவை ஏற்பட்டால் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
சென்னையில் காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு உறுதுணையாக போலீஸ் நவீனமயமாக்கல் ஐ.ஜி. சஞ்சய்குமார் செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.