அடுத்த வாரத்தில் கூட்டணி முடிவு: வாசன் அறிவிப்பு

அடுத்த வாரத்தில் கூட்டணி முடிவு: வாசன் அறிவிப்பு
Updated on
1 min read

யாருடன் கூட்டணி என்பது குறித்து மார்ச் இரண்டாவது வாரத் தில் அறிவிப்பதாக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரி வித்துள்ளார்

‘காமராஜ்’ திரைப்படத்தின் டிவிடி வெளியிட்டு விழா சென்னை யில் நேற்று நடைபெற்றது. விழா வில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், சமூக ஆர்வலர் கிருஷ் ணம்மாள் ஜெகநாதன், காந்தி யின் தனிச்செயலாளர் கல்யாணம் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர். நிகழ்ச்சியில் ஜி.கே.வாசன் பேசியதாவது:

‘‘தமிழகத்தில் காமராஜர் ஆட்சிக் காலம்தான் பொற்காலம். கல்வி, தொழில்துறை உள்ளிட்ட அனைத்திலும் புரட்சி ஏற்பட்டதும் அப்போதுதான். இனி நான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் ‘காமராஜ்’ படத்தின் டிவிடியை பரிசாக அளிக்க உள்ளேன். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி சேரும் என்பதை இம்மாதம் இரண்டாவது வாரத்தில் அறிவிக்க உள்ளோம்.’’ இவ்வாறு ஜி.கே.வாசன் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in