நாட்டின் பாதுகாப்பில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும்: ராணுவ அதிகாரிகளுக்கு தளபதி தல்பீர்சிங் வேண்டுகோள்

நாட்டின் பாதுகாப்பில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும்: ராணுவ அதிகாரிகளுக்கு தளபதி தல்பீர்சிங் வேண்டுகோள்
Updated on
1 min read

நாட்டின் பாதுகாப்பில் முழு கவனத்துடனும் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடனும் செயல்பட வேண்டும் என்று ராணுவ அதிகாரிகளுக்கு இந்திய ராணுவ தளபதி தல்பீர் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. இதில் இந்திய ராணுவ தளபதி தல்பீர் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பயிற்சி யில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கு பதக் கங்களை வழங்கினார். முன்னதாக பயிற்சியை நிறைவு செய்த அதிகாரி களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் தல்பீர் சிங் பேசியதாவது:

ராணுவத்தில் சேர்ந்து சேவை செய் வது மிகவும் பெருமைக்குரியது, மதிப்புமிக்கது, உயர்வானது. நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த இளம் வீரர் களின் தன்னலமற்ற சேவை பாராட்டத் தக்கது. பயிற்சியை நிறைவு செய்த இளம் ராணுவ அதிகாரிகள் நாட்டுப்பற்றுடன் கடமையை செய்ய வேண்டும். தற்போது பயிற்சி பெற்ற வீரர்கள் நாட்டின் பாதுகாப்பில் முழு கவனத்துடனும் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடனும் செயல்பட வேண்டும். நீங்கள் அதை நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இதன் மூலம் நீங்கள் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும்.

இவ்வாறு தல்பீர் சிங் பேசினார்.

விழா நிறைவில், பயிற்சியை நிறைவு செய்த அதிகாரிகள் அணிந்திருந்த சீரு டையில் துணியால் மறைக்கப்பட்டிருந்த நட்சத்திர பட்டயங்கள் (ஸ்டார்கள்) திறக்கப்பட்டு, அவர்களுக்கு ராணுவ அதிகாரிகளுக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர்கள் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தி வண்ண பலூன்களை பறக்க விட்டும், ஆரவாரமிட்டும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சக வீரர்களை கட்டி அணைத்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

விழாவில் பயிற்சி மையத் தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் பாபி மேத்யூ, பயிற்சி மைய அதிகாரிகள், பயிற்சி பெற்றவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கடந்த 11 மாதங்களாக ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில், 37 பெண் அதிகாரிகள், 146 ஆண் அதிகாரிகள் என மொத்தம் 183 பேர் பயிற்சி பெற்றனர். பயிற்சி நிறைவு செய்த இவர்கள் ராணுவத்தின் பல்வேறு படைப் பிரிவுகளில் பணியாற்றுவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in