

பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய சமக, சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்கப் போவதாக அறிவித்தது. சமக சார்பில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு, நேர்காணலும் நடத்தப்பட்டது. வேட்பாளர் பட்டி யல் இன்னும் சில தினங் களில் வெளியிடப்படும் என்று சரத்குமார் கூறியிருந்தார். பாஜக வுடன் கூட்டணி அமைப்பதாக கூறிவிட்டு தன்னிச்சையாக வேட்பாளர்களை சரத்குமார் அறிவிக்கப் போகிறாரா என்று சர்ச்சை எழுந்தது.
இது தொடர்பாக சரத்குமாரி டம் கேட்டபோது, ‘‘பாஜக கூட்டணி உருவாவதற்கு முன்பே, சமக சார்பில் 234 தொகு திகளுக்கும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. அதனடிப்படை யில் நேர்காணலை நடத்தி னோம். வேட்பாளர் தேர்வுப் பணி தற்போது நடந்து வருகி றது. எந்த தொகுதியில் யாரை நிறுத்தலாம், எந்தெந்த தொகு திகளில் வெற்றி வாய்ப்பு உள்ளது என்பதை அறிவதற்காக முன்தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். பாஜக வுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே வேட்பாளர் பட்டியல் வெளியாகும்’’ என்றார்.