Last Updated : 08 Nov, 2021 05:00 PM

 

Published : 08 Nov 2021 05:00 PM
Last Updated : 08 Nov 2021 05:00 PM

சென்னை மழை பாதிப்பை தடுக்க  முதல்வர் என்ன நடவடிக்கை எடுத்தார்?- அண்ணாமலை கேள்வி

மதுரை 

தமிழக முதல்வர் ஸ்டாலின் மேயராக இருந்த போது இருந்த நிலையில் தான் தற்போதும் சென்னை உள்ளது, சென்னையில் மழை பாதிப்பை தடுக்க முதல்வர் என்ன நடவடிக்கை எடுத்தார்? என பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:

"ச”ட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள உத்திரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் 4 மாநிலங்களில் தற்போது பாஜக ஆட்சியும், பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சியும் நடைபெறுகிறது. பஞ்சாப்பில் பலமுனை போட்டி நிலவுகிறது. இருப்பினும் அங்கு பஜக 149 இடங்களில் தனித்துப் போட்டியிடுகிறது. 5 மாநில தேர்தலிலும் பாஜக வெற்றிபெறும். இடைத்தேர்தலில் பாஜகவுக்கு தோல்வி ஏற்படவில்லை. ஆனால் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டதாக தவறாக தகவல் பரப்பப்படுகிறது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை மேயராக இருந்துள்ளார். அப்போதும் சென்னை மழையால் கடும் பாதிப்பை சந்தித்தது. தற்போது அவர் முதல்வராக உள்ளார். இருந்த போதிலும் அவர் மேயராக இருந்த போது இருந்த நிலையில் தான் சென்னை உள்ளது. பருவமழையின் போது சென்னை கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதை சரி செய்ய முதல்வர் என்ன நடவடிக்கை எடுத்தார்?

முல்லை பெரியாறு அணையில் எவ்வளவு அக்கறையுடன் பாஜக உள்ளதோ, அதே அக்கறையுடன் தான் காவிரி பிரச்சினையையும் அணுகி வருகிறோம். மேகதாட் அணை கட்டுவதற்கு எதிராக போராட்டம் நடத்திய பாஜக மட்டுமே.” இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x