

முதல்வர் ஜெயலலிதாவை அவ தூறாக பேசியதாக தொடரப் பட்ட வழக்கில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும், விஜயதரணி எம்.எல்.ஏ.வும் நாகர்கோவில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப் பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்லில் 27.9.2015-ல் காங் கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற் றது. இக்கூட்டத்தில் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், விளவங்கோடு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் விஜயதரணி ஆகியோர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசு வழக்கறி ஞர் ஞானசேகரன் நாகர்கோவி லில் உள்ள செஷன்ஸ் நீதிமன் றத்தில் இருவர் மீதும் தனித் தனியே மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை மாவட்ட செஷன்ஸ் நீதிபதி (பொறுப்பு) ஜான் டி.சந்தோசம் விசாரித்தார். ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வரும் ஏப்ரல் 4-ம் தேதியும், விஜயதரணி எம்.எல்.ஏ. ஏப்ரல் 11-ம் தேதியும் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தர விட்டார்.