கோபி கொடிவேரி அணை; சுற்றுலாப் பயணிகள் வருகைக்குத் தடை: பொதுப்பணித்துறை

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் இருந்து அதிகப் படியான நீர் வெளியேற்றப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் வருகைக்குப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தின் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றானது கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள கொடிவேரி அணை.

இங்கு சுற்றுலாப் பயணிகள் குளிப்பதுடன் பரிசல் பயணம் மேற்கொள்வது வழக்கம். தற்போது தமிழகம் முழுவதும் பருவமழை தீவிரமடைந்துள்ளது. பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக ஈரோடு மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருவதால் கொடிவேரி அணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் கொள்ளளவை நெருங்கி வருவதால், அணைக்கு வரும் நீரும் வெளியேற்றுவதும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் வருகைக்கும், அணைப் பகுதியில் குளிக்கவும், பரிசல் பயணம் மேற்கொள்வும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in