

வங்கக் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
வட கிழக்கு பருவ மழை காரணமாகத் தமிழகம் முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இந்தக் காற்றழுத்தத் தாழ்வு பகுதி நவம்பர் 11 ஆம் தேதி வழுவடைந்து தமிழகம் அருகே வரவுள்ளது என்றும், இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும் வட தமிழக கடலோர பகுதிகளிலும், கேரளா , கர்நாடகா கடலோர பகுதியிலும், லட்சத்தீவு பகுதிகளிலும் கடல் சீற்றம் காணப்படும் என்றும், தென்மேற்கு, மத்திய மேற்கு மற்றும் மத்திய அரபிக் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.