செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு 1000 கனஅடியாக அதிகரிப்பு

செம்பரம்பாக்கம் | கோப்புப்படம்.
செம்பரம்பாக்கம் | கோப்புப்படம்.
Updated on
1 min read

செம்பரக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு தற்போது 500 கனஅடியிலிருந்து மேலும் 500 அடி உயர்த்தி 1000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னையிலும் சென்னையைச் சுற்றியுள்ள செங்கல்பபட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூவர் மாவட்டங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால் சென்னைக்கு நீராதாரங்களாக உள்ள செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிப்பகுதிகளிலும் அதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் நீர் நிரம்பி வருகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில் இதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் கரையோரப் பகுதியில் உள்ளவர்களும் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இன்று காலை 11.30 மணிஅளவில் புழல் ஏரியில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டது. பிற்பகல் 1.30 மணியளவில் செம்பரம்பாக்கம் ஏரியியிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

பலத்த காவல்துறை பாதுகாப்புக்கிடையே மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் பிற்பகல் 1.30 மணியளவில் செம்பரம்பாக்கம் ஏரி நீர்த்தேக்கத்தின் 2வது மற்றும் 5வது மதகிலிருந்து 500 கன அடி அளவு நீர் திறக்கப்பட்டது. தற்போது 3 மணியளவில் நிலையில் 4வது மதகிலிருந்து 1000 கனஅடியாக உபநீர் அதிகரிக்கப்பட்டு திறந்துவிடப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில் நிலைமை கட்டுக்குள்இருப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தற்போது ஏரிகளில் நீர்வரத்து பெருகிவருவதால் திறந்து விடப்படும் நீரின் அதிரித்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதுதவிர, திருவள்ளூர் மாவட்டம் புழல் திறக்கப்படும் நீரின் கனஅளவும் விநாடிக்கு 1500 கன அடியிலிருந்து 2000 அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம், புழல் ஆகிய இரு ஏரிகளிலிருந்தும் திறக்கப்படும் நீரின் அளவு கூடுதலாக 500 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகரித்து வருவதன் காரணமாக பொதுப்பணித்துறை அதிகாரிகளின் ஆய்வின் முடிவின் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in