

சென்னையில் பெய்த கனமழையால் நகரின் பல பகுதிகளிலும் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்க கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று காலை முதலே நகரின் பல்வேறு பகுதிகளில் இடைவெளிவிட்டு மழை பெய்து வந்தது. ஆனால், நேற்று இரவு பெய்யத் தொடங்கியபின் விடிய, விடிய பெய்தது. இன்று காலையும் தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் விடாது மழை பெய்தது.
சென்னையில் நேற்று இரவு முதல் விடாமல் செய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதகிளில் வீடுகளில் மழை நீர் புகுந்தது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
சென்னையில் பெய்த கனமழையால் சாலைகளிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. கிண்டி-கோயம்பேடு சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.