

சென்னையில் நேற்று இரவு முதல் விடாமல் செய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதகிளில் வீடுகளில் மழை நீர் புகுந்தது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
தென்மேற்கு வங்க கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று காலை முதலே நகரின் பல்வேறு பகுதிகளில் இடைவெளிவிட்டு மழை பெய்து வந்தது. ஆனால், நேற்று இரவு பெய்யத் தொடங்கியபின் விடிய, விடிய பெய்தது. இன்று காலையும் தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் விடாது மழை பெய்தது. கடந்த 5 ஆண்டுகளுக்குப்பின் இதுபோன்ற மழையைப் பார்த்திராத மக்கள் மகிழ்ச்சியும் அதேசமயம் அச்சமும் அடைந்தனர்.
சென்னையில் நேற்று காலை முதலே நகரின் பல்வேறு பகுதிகளில் இடைவெளிவிட்டு மழை பெய்து வந்தது. ஆனால், நேற்று இரவு பெய்யத் தொடங்கியபின் விடிய, விடிய பெய்தது. இன்று காலையும் தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் விடாது மழை பெய்தது. கடந்த 5 ஆண்டுகளுக்குப்பின் இதுபோன்ற மழையைப் பார்த்திராத மக்கள் மகிழ்ச்சியும் அதேசமயம் அச்சமும் அடைந்தனர்.
சென்னையில் இன்று அதிகப்பட்சமாக நுங்கம்பாக்கத்தில் 20 செ..மீ. வில்லிவாக்கத்தில் 16 செ.மீ. மழை பெய்துள்ளது. மீனம்பாக்கத்தில் 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
சென்னையின் முக்கிய பகுதிகளான வடபழனி, நுங்கம்பாக்கம், தி நகர், போரூர், வளசரவாக்கம், அண்ணாசாலை, கோடம்பாக்கம், கோயம்பேடு, குரோம்பேட்டை மாம்பலம், மைலாப்பூர் உள்ளிட்ட பல முக்கியப் பகுதிகளில் மிககனமழை பெய்ததால் சாலைகள் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதபோல் இன்று சென்னையின் முக்கிய வீதிகள் தண்ணீரில் மிதக்கிறது.
2015க்குப் பிறகு அதிக அளவில் பெய்துள்ள மழையால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். திநகர் துரைசாமி சுரங்கப்பாதை மூடப்பட்டது. இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னையில் நேற்று இரவு முதல் விடாமல் செய்த கனமழையால் சென்னை நந்தனம் டர்ன்புல்ஸ் சாலை 3வது குறுக்கு தெருவில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்தது.இதனால் அக்குடியிருப்பில் உள்ளவர்கள் விடிய விடிய தூங்காமல் தண்ணீரை பக்கெட்டில் எடுத்து வெளியேற்றி வருகிறார்கள்.