சென்னையில் விடிய விடிய கனமழை; அடுத்த 3 மணி நேரத்துக்கு நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னையில் விடிய விடிய கனமழை; அடுத்த 3 மணி நேரத்துக்கு நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம்
Updated on
1 min read

சென்னையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் சென்னையில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிறு காலை 5 மணிவரை இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ந்தது.

சென்னையில் அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 20 செ.மீ கனமழை பதிவாகி உள்ளது.

எம்ஆர்சி நகர், அண்ணா பல்கலைகழகம், வில்லிவாக்கம், பெரம்பூர், மீனம்பாக்கம், தரமணி, நந்தனம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ந்தது.

சென்னை பல இடங்களில் 10 செ.மீக்கு மேல் மழை பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக சென்னையில் முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது.

குறிப்பாக வடசென்னையில் பல இடங்களில் வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளதால் மக்கள் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர்.

இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னையில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வங்கக் கடலில் வரும் 9-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், வட தமிழக கடலோர மாவட்டங்களில் 11, 12-ம் தேதிகளில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை மற்றும் வெள்ளம் சார்ந்த புகார்களை தெரிவிக்க உதவி எண்களை அறிவித்துள்ளது சென்னை மாநகராட்சி

எண்களின் விவரம்:

1913
04425619206
04425619207
04425619208

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in