

உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத் தில் மாவட்ட அளவில் சிறந்த தகுதியான வழக்கறிஞர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 24-ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி வழக்க றிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப் பினர் நீதிமன்றத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து சேலத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பரமசிவம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சென்னை உயர் நீதிமன்றத்துக் கான 75 நீதிபதிகள் பணியிடங்களில் 41 இடங்கள் காலியாக உள்ளன. இதற்கான 9 பேர் கொண்ட பட்டியலில் 6 பேருக்கு பணி உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது, 30 பணியிடங்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களில் 19 பேரையும், மூத்த மாவட்ட நீதிபதிகள் 11 பேரையும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழு பரிந் துரை செய்துள்ளது.
நீதிபதிகள் நியமனத்தில் மாவட்ட நீதிமன்றங்களில் பணிபுரியும் சிறந்த தகுதியான வழக்கறிஞர்களையும் 3-ல் 2 பங்கு பணியிடத்துக்குப் பரிந் துரை செய்ய வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இதற்காக கடந்த 3-ம் தேதி நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டோம்.
இதற்கானத் தீர்மானத்தை தலைமை நீதிபதிக்கும், தலைமை பதிவாளருக்கும் அனுப்பி வைத் தோம். நேரிலும் மனு கொடுத்துள் ளோம். இவ்வளவு முயற்சிகளுக் குப் பின்னரும் மாவட்ட அளவில் தொழில்புரியும் வழக்கறிஞர் களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள் ளது ஏமாற்றம் அளிக்கிறது.
எனவே, 30 நீதிபதிகள் பணி நியமனத்தில் மாவட்ட வழக்கறிஞர் களுக்கு 3-ல் 2 பங்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 24-ம் தேதி ஒருநாள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இதில், தமிழகம் மற்றும் புதுச் சேரியைச் சேர்ந்த 60 ஆயிரம் வழக் கறிஞர்கள் பங்கேற்க உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது கூட்டமைப் பின் செயலாளர் ரகுநாதன், பொரு ளாளர் மணி ஆகியோர் உடனி ருந்தனர்.