Published : 06 Nov 2021 03:06 AM
Last Updated : 06 Nov 2021 03:06 AM

சுற்றுச்சூழலை பாதுகாக்க தமிழகத்தில் தனி நிறுவனம்: அனுமதி அளித்து அரசு உத்தரவு

சென்னை

சுற்றுச்சூழலை பாதுகாக்க `தமிழ்நாடு பசுமை பருவநிலை நிறுவனம்' தொடங்க அனுமதி அளித்துஅரசு ஆணை பிறப்பித்துள்ளது.

பருவநிலை மாற்றம் கடலோரப் பகுதிகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் புயல்கள், வெப்பஅலை காரணமாக உடல்நலக் குறைவுகள், உயிரிழப்பு, உணவுப்பற்றாக்குறை என பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

விவசாயம் பாதிக்கப்படுவதால் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமும், கடல் மீன் வளம் குறைவதால் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மீனவர்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

இந்நிலையில், ‘‘தற்போது தமிழகத்தின் மொத்த நிலப் பரப்பில் 23.27 சதவீதமாக உள்ள பசுமைப்பரப்பை அடுத்த 10 ஆண்டுகளில் 33 சதவீதமாக உயர்த்த பசுமைதமிழ்நாடு இயக்கம் தொடங்கப்படும். பருவ நிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள ரூ.500 கோடியில் தமிழ்நாடு பருவநிலை மாற்ற இயக்கம் தொடங்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.150 கோடியில்தமிழகத்தில் 100 சதுப்பு நிலங்களை அடையாளம் கண்டு,அவற்றை மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு சதுப்புநில இயக்கம் தொடங்கப்படும்’’ என்று தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் உரையில்நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்திருந்தார்.

இந்த 3 இயக்கங்களையும் சிறப்பாக செயல்படுத்த தமிழ்நாடுபசுமை பருவநிலை நிறுவனத்தை தொடங்க அனுமதி கோரி, சுற்றுச்சூழல், வனத் துறை சார்பில் அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது.

அதை பரிசீலித்து, ரூ.5 கோடியில், நிதித் துறை ஒப்புதலுடன்தமிழ்நாடு பசுமை பருவநிலை நிறுவனத்தை தொடங்க தமிழக அரசு சமீபத்தில் அரசாணை பிறப்பித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x