

திரிபுரா மாநிலத்தில் இஸ்லாமியர்கள் தாக்கப்படுவதை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தாம்பரம் சண்முக சாலையில் இருந்து பேரணியாக வந்து பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைச் செயலர் எம்.யாக்கூப் தலைமை தாங்கினார். மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான அப்துல் சமது பங்கேற்று பேசினார்.
இந்த ஆர்பாட்டத்தில் திரிபுராவில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், இடிக்கப்பட்ட மசூதிகளை மீண்டும் கட்டித் தர வேண்டும் என்று வலியுறுத்தினர்.