Published : 31 Mar 2016 07:58 AM
Last Updated : 31 Mar 2016 07:58 AM

பாஜக நிர்வாகிகளுடன் பிரகாஷ் ஜவடேகர் இன்று ஆலோசனை

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் மத்திய அமைச்சரும், அக்கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பிரகாஷ் ஜவடேகர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாள ராக நியமிக்கப்பட்ட அவர், கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோ ருடன் பேச்சு நடத்தினார். மீண்டும் மார்ச் 3-ம் தேதி சென்னை வந்த அவரால் யாரையும் சந்திக்க முடியவில்லை. கூட்டணி முயற்சி தோல்வியடைந்த நிலையில் தனித்துப் போட்டியிடும் நிலைக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேர்தல் பணிகள் தொடர்பாக தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஜவடேகர் இன்று ஆலோசனை நடத்துகிறார். இதில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட மாநில மையக் குழு உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x