தீபாவளி தொடர் விடுமுறை: மெகா தடுப்பூசி முகாம் நவ.14ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

தீபாவளி தொடர் விடுமுறை: மெகா தடுப்பூசி முகாம் நவ.14ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
Updated on
1 min read

தொடர் விடுமுறை காரணமாக, நாளை நடைபெற இருந்த மெகா கரோனா தடுப்பூசி முகாம் வரும் 14ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் மூலம் திமுக அரசு தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்தியுள்ளது.

முதலில் ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி முகாம் நடத்தி வந்த தமிழக அரசு அசைவப் பிரியர்களின் கோரிக்கையை ஏற்று சனிக்கிழமைகளில் தடுப்பூசி முகாம் நடத்தி வந்தது. இதுவரை 7 தடுப்பூசி முகாம்களை நடத்தியுள்ள தமிழக அரசு நாளை 8-வது மெகா தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிட்டு இருந்தது.

இதனிடையே, வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை வந்ததால் அடுத்து வந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக சனிக்கிழமையான நாளை நடைபெற இருந்த 8-வது மெகா தடுப்பூசி முகாம் அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமையான 14ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதனை உறுதி செய்துள்ள மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தொழிற்சாலை ஊழியர்கள் நலனுக்காக ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி முகாம் மாற்றப்பட்டு இருப்பதாகத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in