புதுச்சேரி, காரைக்காலில் பெட்ரோல் விலை ரூ.13, டீசல் விலை ரூ.19 குறைந்தது: முதல்வர் அறிவிப்பு 

புதுச்சேரி, காரைக்காலில் பெட்ரோல் விலை ரூ.13, டீசல் விலை ரூ.19 குறைந்தது: முதல்வர் அறிவிப்பு 
Updated on
1 min read

மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீதான கலால் வரியைக் குறைத்த நிலையில் புதுச்சேரி மாநில அரசு கூடுதலாக 7 ரூபாய் வாட் வரியை குறைத்துள்ளதால் பெட்ரோல் விலை ரூ.13 வரையிலும், டீசல் விலை ரூ.19 வரையிலும் குறைந்து விற்பனையாகின்றது.

புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் விலை நேற்று ரூ.107.79 க்கும், டீசல் ரூ.102.66 க்கு விற்பனையானது. இந்நிலையில் பெட்ரோல் டீசல்.விலையில் மத்திய அரசு தனது பங்கிற்கு பெட்ரோல் ரூ.5 க்கும், டீசல் ரூ.10 வரையிலும் குறைத்து அறிவித்திருந்தது.

இந்நிலையில் தீபாவளி பரிசாக புதுச்சேரி மாநிலத்தில் அரசின் சார்பில் தனது பங்கிற்கு மேலும் ரூ.7 வரை வாட்வரியை குறைத்து முதல்வர் ரங்கசாமி இன்று காலை அறிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து புதுச்சேரியில் இன்று பெட்ரோல் விலை ரூ.12.85 குறைந்து ரூ.94.94 க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போன்று டீசல் விலை ரூ.19 குறைந்து ரூ.83.58 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

புதுச்சேரி அரசின் பெட்ரோல் டீசல் மீதான வாட்வரியை மேலும் குறைத்ததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in