Published : 21 Jun 2014 09:48 AM
Last Updated : 21 Jun 2014 09:48 AM

கட்டண உயர்வுக்கு அரசியல் தலைவர்கள், பயணிகள் எதிர்ப்பு

ரயில் கட்டண உயர்வுக்கு அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ராமதாஸ் (பாமக):

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் ரயில் கட்டணமும் பெட்ரோல், டீசல் விலைகளும் குறைக்கப்படும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம்தான் ஏற்பட்டுள்ளது. ஏற் கெனவே பஸ் கட்டணம் கடுமை யாக உயர்ந்துள்ள நிலையில், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்களின் தொலைதூரப் பயணங் களுக்கு ரயில்களையே நம்பி யுள்ளனர். எனவே, மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ரயில் கட்டண உயர்வைத் திரும்பப் பெறவேண்டும்.

ஜி.ராமகிருஷ்ணன் (மார்க் சிஸ்ட்):

சாதாரண ஏழை எளிய, நடுத்தர மக்களை மிகக் கடுமை யாகப் பாதிக்கும் என்று தெரிந் திருந்தும் மத்திய அரசு ரயில் கட்டணத்தை உயர்த்தியுள்ளது கண்டனத்துக்குரியது. நரேந்திர மோடி பிரதமரானால் விலைவாசி குறையும் என்று நம்பி வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது.

சரத்குமார் (சமக):

ரயில்களில் பராமரிப்புப் பணி மோசமாக உள்ள நிலையில் கட்டணத்தை மட்டும் உயர்த்தியது எந்த விதத்தில் நியாயம்? சரக்குக் கட்டணமும் உயர்ந்திருப்பதால் விலைவாசி மேலும் உயரும். பட்ஜெட்டுக்கு முன்பாகவே ரயில் கட்டணத்தை உயர்த்தியிருப்பது மக்களுக்கு ஏமாற்றமே.

மோகன் ராம், மண்டல ரயில் பயணிகள் ஆலோசனைக் குழு உறுப்பினர்:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பதவி ஏற்பதற்கு முன்பா கவே, கடந்த ஜனவரி மாதம் காங்கிரஸ் அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டுக்கு முன்பு, ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டது. மேலும், தற்போதைய நிலையில் நாட்டில் பேருந்து கட்டணங்களை ஒப்பிடுகையில், ரயில் கட்டணம்தான் மிகக் குறைவாக உள்ளது.

எனினும், 14 சதவீதம் உயர்வு என்பது மிக அதிகம்தான். இதை மத்திய அரசு குறைக்க வேண்டும்.

சடகோபன், தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மையத்தின் ஒருங்கிணைப்பாளர்:

இந்த கட்டண உயர்வின் மூலம், விமானக் கட்டணமும், ரயில் முதல் வகுப்பு ஏசி கட்டணமும் கிட்டத்தட்ட ஒரே அளவை நெருங்கியுள்ளது. இதனால், பயணிகள் ரயிலில் செல்வதை விட விமானத்தில் செல்லவே விரும்புவர். இதன் மூலம், அவர்களுக்கு பயண நேரம் மிச்சமாகும்.

மேலும், இந்தக் கட்டண உயர் வால் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பயணிகளுக் கான அடிப்படை வசதிகள் மேம் படுமா என்பது கேள்விக் குறியாக உள்ளது. காரணம், கடந்த 10 ஆண்டுகளாக பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் மிகவும் மோசமாக உள்ளன.

வைத்தியநாதன், ரயில் பயணி, தாம்பரம்:

இந்த ரயில் கட்டண உயர்வு சாமானிய மக்களை வெகுவாக பாதிக்கும். தற்போது, இராக்கில் ஏற்பட்டுள்ள உள்நாட்டுப் போரால் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பேருந்து கட்டணமும் உயர வாய்ப்புள்ளது.

டி.ரவிக்குமார், தலைவர், அனைத்திந்திய ரயில் மற்றும் பேருந்து பயணிகள் நல்வாழ்வு சங்கம்:

ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் பயணிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை. உணவு, குடிதண்ணீர் ஆகியவற்றை ரயில்வே நிர்வாகம் 2 மடங்கு அதிக விலை வைத்து விற்கிறது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் சென்னை-அரக்கோணம் வழித்தடத்தில் இரு ரயில் பாதைகள் அமைக்கப்பட்டன.

அதன் பிறகு, கூடுதலாக இரு ரயில் பாதைகள் மட்டுமே அமைக்கப்பட்டன.

பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல், ரயில்வே நிர்வாகம் கட்டணத்தை மட்டும் உயர்த்துவதை எந்தவிதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x