Last Updated : 21 Mar, 2016 09:20 AM

 

Published : 21 Mar 2016 09:20 AM
Last Updated : 21 Mar 2016 09:20 AM

அதிமுகவில் தொடரும் பதவி பறிப்புகள்: தலைமை மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கையா?

கட்சியிலும் ஆட்சியிலும் சகல செல்வாக்குடன் வலம் வந்தவர்களின் பதவி ஆட்டம் கண்டிருப்பது அதிமுகவில் அடிமட்ட தொண்டர்கள் வரை சமீபகாலமாக பரபரப்பை ஏற்படுத்திவரும் செய்தியாகும்.

ஐவரணி என அழைக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன் ஆகியோர் ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்றிருந்தவர்கள்.

கட்சி ஒழுங்கு நடவடிக்கை குழு உட்பட முக்கிய முடிவுகளில் பங்கெடுத்து வந்தனர். இந்த செல்வாக்கை பயன்படுத்தி மாவட் டச் செயலாளர்கள் முதல் பல்வேறு கட்சிப் பதவிகள் வரை தங்களுக்கு சாதகமானவர்களையே நியமித்து வந்தனர்.

தேர்தல் நெருங்கியதும் ‘சீட்’ கேட்டு இவர்கள் வீடுகளில் கட்சியினர் குவிந்தனர். அந்த அளவுக்கு இவர்களது செல்வாக்கு கொடிகட்டி பறந்தது. இதில் இருந்துதான் இவர்களுக்கு சரிவு தொடங்கியது.

கட்சித் தலைமைக்கு சென்ற புகார்களின் அடிப்படையில், இவர்களது நடவடிக்கைகள் பற்றி விசாரிக்கும்படி உளவுத்துறைக்கு தகவல் பறந்தது. வெளிமாநிலங்களில் சொத்து சேர்த்தது, சீட் வாங் கித்தர ஐவரணிக்கு நெருக்கமான வர்கள் நடத்திய பேரம் ஆகி யவை அம்பலத்துக்கு வந்தன.

இதையடுத்து பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் ஆதரவாளர்களின் பதவி பறிக்கப்பட்டு, இவர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டது.

ஜெயலலிதா நடத்திய வேட்பாளர் நேர்காணலிலும் ஐவர ணியினர் பங்கேற்கவில்லை அதன் பிறகு நடந்த கூட்டணி பேச்சுவார்த் தையில் வைத்திலிங்கம், எடப் பாடி பழனிச்சாமி இருவரும் பங் கேற்றனர். இருவரும் அப்ரூவராக மாறியதால், மன்னிப்பு வழங்கப் பட்டு மீண்டும் பொறுப்பு வழங்கப் பட்டதாக கூறப்படுகிறது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கடந்த வெள்ளிக்கிழமை, திடீரென போயஸ் தோட்டத்துக்கு அழைக்கப் பட்டனர் ஓ.பன்னீர்செல்வமும், நத்தம் விஸ்வநாதனும். தங்களுக்கு மறுவாழ்வு கிடைத்துவிட்டதாக அவர்களின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால், சீனியர்கள் இருவரிடமும் வெற்றுப் பத்திரங்களில் கையெழுத்து பெற்ற பிறகே போயஸ் தோட்டத்துக்குள் அனுமதிக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சட்டப்பேரவைத் தேர்தல் நேரத் தில் இப்படி மூத்த அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், நிர் வாகிகள் மீது நடவடிக்கை எடுப் பது கட்சிக்கு அவப்பெயரை ஏற் படுத்தாதா என்று அதிமுக மூத்த நிர்வாகி ஒருவரிடம் கேட்ட போது, ‘‘அதிமுகவை பொறுத்த வரை அம்மாதான் எல்லாம். வேறு யாரையும் நம்பக் கூடாது. தவறு செய்தால் யாராக இருந் தாலும் நடவடிக்கை நிச்சயம் என்பதை வெளிப்படுத்தவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப் படுகின்றன. இது, தொண்டர்கள் மத்தியில் தலைமையின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்வதற்கான நடவடிக்கைதான்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x