போலீஸாருக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

போலீஸாருக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
Updated on
1 min read

இரண்டாம்‌ நிலைக்‌ காவலர்கள்‌ முதல்‌ தலைமைக்‌ காவலர்‌ வரையிலான காவலர்கள்‌ அனைவருக்கும்‌ வாரத்தில்‌ ஒரு நாள்‌ ஓய்வு வழங்கப்படும் என்று முதல்வர்‌ மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்‌.

இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

‌'‌'தமிழக முதல்வர்‌ மு.க.ஸ்டாலின் சட்டப்‌பேரவையில்‌, கடந்த 13-9-2021 அன்று நடைபெற்ற காவல்‌துறை மானியக்‌ கோரிக்கையின்‌ மீதான விவாதத்திற்கு பதிலளித்துப்‌ பேசுகையில்‌, ‌'காவலர்கள்‌ தங்கள்‌ உடல்‌ நலனைப்‌ பேணிக்‌ காத்திட ஏதுவாகவும்‌, தங்களது குடும்பத்தாருடன்‌ போதிய நேரம்‌ செலவிடுவதற்காகவும்‌, இரண்டாம்‌ நிலைக்‌ காவலர்கள்‌ முதல்‌, தலைமைக்‌ காவலர்‌ வரையிலான காவலர்கள்‌ அனைவருக்கும்‌ வாரத்தில்‌ ஒரு நாள்‌ ஓய்வு வழங்கப்படும்‌' என்று அறிவித்தார்‌.

இந்த அறிவிப்பினைச்‌ செயல்படுத்தும்‌ விதமாக, காவலர்கள்‌ தங்கள்‌ உடல்‌ நலனைப்‌ பேணிக்‌ காத்திட ஏதுவாகவும்‌, தங்களது குடும்பத்தாருடன்‌ போதிய நேரம்‌ செலவிடுவதற்காகவும்‌, இரண்டாம்‌ நிலைக்‌ காவலர்கள்‌ முதல்‌, தலைமைக்‌ காவலர்‌ வரையிலான காவலர்கள்‌ அனைவருக்கும்‌ வாரத்தில்‌ ஒரு நாள்‌ ஓய்வு வழங்கிட தமிழக முதல்வர்‌ மு.க.ஸ்டாலின் இன்று (3-11- 2021) உத்தரவிட்டுள்ளார்‌. அதற்கான அரசாணை இன்றைய தினம்‌ பிறப்பிக்கப்பட்டுள்ளது .

காவலர்களின்‌ நலனைக்‌ கருத்தில்‌ கொண்டு, முதல்வர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, காவல்‌ பணியில்‌ இடையறாது ஈடுபட்டு, சவாலான பணிகளை எதிர்கொள்ளும்‌ காவலர்களுக்கு அருமருந்தாக விளங்குவதோடு, புத்துணர்ச்சியோடும்‌, உற்சாகத்தோடும்‌ தங்கள்‌ பணியினை அவர்கள்‌ மேற்கொள்ள வழிவகுக்கும்‌‌'‌'.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in