

வன்முறை, இருள் அகன்று வளமும், நலமும் பெருகிடட்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான திருநாவுக்கரசர் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "ஜாதி, மத, மொழி, மாநில எல்லைகளை தாண்டி பொதுவாக அனைத்து தரப்பு மக்களாலும் ஒளித் திருநாளாய் நாடு முழுவதும் மகிழ்வுடன் கொண்டாடப்படும் தீபாவளித் திருநாளையொட்டி அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அறியாமை, வறுமை, தீமை தீவிரவாதம் மற்றும் வன்முறை இருள் அகன்று அனைவரின் வாழ்விலும் வளமும், நலமும் பெருகிட மனமாற வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.