

நாம் தமிழர் கட்சி சார்பில் சேலத்தில் நடந்த தமிழ்நாடு நாள் கொண்டாடத்தின்போது கொடி ஏற்றிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் அம்மாப்பேட்டையில் நேற்று முன்தினம் தமிழ்நாடு நாள் கொண்டாட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். கூட்டத்துக்கு முன்னதாக மூவேந்தர்களின் சின்னங்கள் பொறித்த கொடியை சீமான் ஏற்றினார். இதுதொடர்பாக அம்மாப்பேட்டை கிராம நிர்வாக அலுவலர் ராஜா, அளித்த புகாரின் பேரில், சீமான் மீது 6 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.