அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் முடிந்ததும் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்: ராஜேஷ் லக்கானி தகவல்

அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் முடிந்ததும் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்: ராஜேஷ் லக்கானி தகவல்
Updated on
1 min read

சட்டப்பேரவை தேர்தலுக்கான அர சியல் கட்சிகளின் பிரச்சாரம் முடிந் ததும், வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து தேர்தல் ஆணை யம் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

சென்னை தலைமை செயலகத் தில் நிருபர்களிடம் நேற்று ராஜேஷ் லக்கானி கூறியதாவது:

தமிழகத்தில் வாக்குப்பதிவை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு தேர்தல்களில் குறைவான வாக்குகள் பதிவான வாக்குச்சாவடிகளைக் கணக்கிட்டு அங்கே அதிக வாக்குகள் பதிவாகச் செய்ய தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், வாக்குச்சாவடி அதிகாரி, ஆசிரியர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் இடம்பெற்றிருப்பர். இக்குழுவினர் வீடு வீடாகச் சென்று வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக் கூறுவர்.

வாரச் சந்தை, திருவிழா நடை பெறும் இடங்களில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படும். கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், கோட் டாட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களிலும்,பேருந்துகள், ஆட்டோக்களின் பின்புறமும் வாக் களிக்க வேண்டியதன் அவசியம் குறித்த பிரச்சார பேனர்கள் வைக்கப்படும்.

அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் மே 13-ம் தேதி மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. அதன் பிறகு, முதல் முறையாக தேர்தல் ஆணையம் சார்பில் மே 14, 15 ஆகிய தேதிகளில் வாக்களிக்க வேண்டிய தன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். கர்ப் பிணிகளுக்கு தேர்தல் பணி வழங்க வேண்டாம் என உத்தர விடப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைய இணைய தளத்தை மேம்படுத்தும் பணி நடப் பதால், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மார்ச் 14 முதல் (நாளை) ஆன்-லைனில் விண்ணப் பிக்கலாம். தேர்தலையொட்டி வாகன அனுமதி, பொதுக்கூட்ட அனு மதிக்கு ஆன்-லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதன் படி, இதுவரை பொதுக்கூட்டங் களுக்கு 466 விண்ணப்பங்களும், வாகன அனுமதி கோரி 156 விண்ணப் பங்களும், ஊர்வலம் நடத்த அனுமதி கோரி 74 விண்ணப்பங்களும், தேர்தல் அலுவலகம் திறக்க அனு மதி கோரி 14 விண்ணப்பங்களும் வந்துள்ளன. இவற்றைப் பரிசீலித்து 24 மணி நேரத்துக்குள் அனுமதி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

டெல்லியில் மார்ச் 14-ம் தேதி தேர்தல் ஆணையக் கூட்டம் நடைபெறுகிறது. இதில், தமிழ்நாடு உட்பட 5 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் கலந்துகொள்கிறோம். இக்கூட்டத்தில், தமிழக தேர்தலுக்கு தேவைப்படும் துணை ராணுவப் படை எவ்வளவு என்பது முடிவாகும். மார்ச் 15-ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தேர்தல் ஏற்பாடு குறித்து வீடியோ கான் பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்த வுள்ளேன். மார்ச் 16-ம் தேதி முதல் மாவட்டந்தோறும் பயணம் செய்து தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய உள்ளேன். இவ்வாறு ராஜேஷ் லக்கானி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in