

ஏழைகளின் பசிப்பிணி போக்கும் அம்மா உணவகத்தை மூடக் கூடாது என்று தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
அம்மா உணவகங்களில் ஆட்குறைப்பு நடப்பதாகவும், அவற்றை மூட அரசு திட்டமிட்டு இருப்பதாகவும் சில கட்சித் தலைவர்கள் கடந்த சில நாட்களாக குற்றம்சாட்டி வருகின்றனர். அம்மா உணவகங்களை மூடக்கூடாது என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அண்ணாமலை நேற்று வெளியிட்ட பதிவில், ‘ஏழைகளின் பசியாற எளிதாய் உணவளித்து அன்னையின் பரிவோடு, அவசிய உணவளித்த அம்மா உணவகத்தை திமுக அரசு மூடக் கூடாது.
மக்கள் பயன்படுத்தும் மகத்தான திட்டத்தை மாற்றுக் கட்சி தொடங்கியதால் மறுக்கக் கூடாது. விருந்தோம்பல் நம் மரபாகும். எனவே, ஏழைகளின் பசிப்பிணி போக்கும் அம்மா உணவகத்தை எதிர்க்காமல் தொடர வேண்டும்’ என்று கூறியுள்ளார்.