

காஞ்சி பட்டுச் சேலைகளுக்கு உலகளவில் வரவேற்பு உண்டு. ஆந்திரம், கர்நாடகம், கேரளம் உள் ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராள மான பொதுமக்கள் பட்டுச் சேலைகளை வாங்க காஞ்சிபுரம் வருகின்றனர். இதைப் பயன் படுத்தி, சில தனியார் விற்பனையா ளர்கள் ஆரணி, தர்மாவரம் பகுதி சேலைகளை காஞ்சி பட்டு எனக்கூறி விற்பனை செய்வதாக கடந்த சில ஆண்டுகளாக புகார் கூறப்படுகிறது.
இந்நிலையில், வாணியம்பாடி மற்றும் சென்னையைச் சேர்ந்த சிலர் காஞ்சியில் உள்ள தனியார் கடை ஒன்றில் வாங்கிய பட்டுச் சேலை போலியானது என தமிழ்நாடு ஜரிகை தர நிர்ணய ஆய்வு கூட பரிசோதனையில் தெரியவந்தது. இதுதொடர்பாக, தனியார் கடை மீது சம்பந்தப்பட்ட நபர்கள் விஷ்ணு காஞ்சி போலீஸில் புகார் அளித்தனர்.
இதுதொடர்பாக ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் நேற்று செய்தி வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் பட்டுச் சேலைகளின் தரம் குறித்த விவரங் கள் அடங்கிய விழிப்புணர்வு பலகைகள் வைக்க கைத்தறித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, கைத்தறி நெசவா ளர் சம்மேளன மாநில பொதுச் செயலாளர் முத்துக்குமார் கூறிய தாவது: மத்திய பட்டு வாரியத் திடம் சில்க் மார்க் மற்றும் கைத்தறி சேலை என்ற அரசு வழங்கும் முத்திரையை பெற்று கொள்ளும் தனியார் பட்டுச் சேலை விற்பனை யாளர்கள், விசைத்தறி மூலம் தயாரிக்கப்படும் சேலைகளில் முறைகேடாக முத்திரையிட்டு விற்கின்றனர்.
ஆரணி மற்றும் தர்மாவரம் பட்டில் தயாரிக்கப்பட்ட சேலை ளிலும், காஞ்சிபுரம் பட்டு என முத்தி ரையிட்டு விற்பனை செய்கின் றனர். இதனால், காஞ்சி பட்டு மீதான பாரம்பரிய மதிப்பு குறை கிறது. இதைத் தடுக்கும் வகையில், மத்திய பட்டு வாரியம் காஞ்சிபுரத் தில் உள்ள தனியார் பட்டுச்சேலை கடைகளில், உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும். போலி பட்டுச்சேலை விற்பதாக ஆதாரத் துடன் நிரூபிக்கப்பட்டால் சம்பந் தப்பட்ட கடைகளுக்கு, கைத்தறித் துறை சீல் வைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இதுகுறித்து, தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல்துறை உதவி இயக்குநர் சிவ வடிவேலு கூறியதாவது: தனியார் பட்டுச் சேலை கடைகளில் ஆய்வு நடத்த எங்களுக்கு அதிகாரம் இல்லை. போலி பட்டுச் சேலைகள் விற் பனை என புகார் எழுந்துள்ளதால், தனியார் கடைகளில் ஆய்வு மேற் கொள்ளுமாறு மத்தியபட்டு வாரி யத்துக்கு பரிந்துரை செய்ய முடிவு செய்யப் பட்டுள்ளது.
காஞ்சி பட்டுச் சேலைகளின் தரம் மற்றும் பட்டு, ஜரிகை ஆகியவற்றின் விவரங்கள் அடங்கிய விழிப்புணர்வு பலகை களை, பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், கோயில்கள், ரயில் நிலையம் போன்ற இடங்களில் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.